பெரம்பலூர்,ஜன.21: அரசு பள்ளி ஆசிரியர் தனது மகனுக்கு வேலைவாங்கித் தருவதாகக்கூறி ரூ.3லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த விவசாயி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் ரவி (58);மாற்றுத்திறனாளி. பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தைச் சேர்ந் தவர் பாரிவள்ளல்(54). இவர், பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். அரசுப் பள்ளியின் ஆசிரியராக இருந்தாலும் தனக்கு உயர் அதிகாரிகள் பலரிடம் தொடர்பு உள்ளது. பணம் கொடுத்தால் உங்களுக்கு அரசுவேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி பலரிடம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வருகிறார்.
இந்த பாரிவள்ளளிடம் குரும்பலூரைச் சேர்ந்த சின்னசாமி மகன் ரவி (58) என்பவரும் தனது மகனுக்கு கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் பெற்றுத் தருவதாக பாரிவள்ளல் கூறிய ஆசை வார்த்தையை நம்பி கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், ஆண்டுகள் கடந்த பிறகும் சொன்னபடி பாரி வள்ளல், ரவியின் மகனுக்கு அலுவலக உதவியாளர் பணியிடத்தை பெற்றுத் தரவில்லை. வேலை வாங்கி கொடுங்கள் இல்லாவிட்டால் கொடுத்தப் பணத்தைத் திருப்பி கொடுங்கள் என ரவி நெருக்கடி கொடுத்த நிலையில், படிப்படியாக ரூ.50ஆயிரம், 50 ஆயிரம் என 3கட்டமாக ரூ.1.50 லட்சம் ரூபாய் பணத்தை பாரிவள்ளல் ரவியிடம் திருப்பி கொடுத்துள்ளார்.
இன்னும் ரூ1.50 லட்சம் பணத்தை பாரிவள் ளல் திருப்பித்தராத நிலை யில் நேற்று(20ஆம்தேதி) திங்கட்கிழமை காலை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடை பெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று புகார் அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்துள்ளார்.கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கலெக்டர் அலுவலகத்திற்குச் செல்வோரை பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்த நிலையில், அங்குவந்த ரவி போலீசாரின் கண்முன்னே, தான் கையில் மறைத்துக் கொண்டு வந்திருந்த 2 லிட்டர் பெட்ரோல் கேனைத் திறந்து தலையில் ஊற்றினார். இதனைப் பார்த்து பரபரப்பான போலீசார் ஓடிச்சென்று, ரவியை சூழ்ந்து கொண்டு அவர் கையில் இருந்த பெட்ரோல் கேனைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், ரவி அணிந்திருந்த சட்டை, கைலியை கழட்டி உடலில் தண்ணீர் ஊற்றினர். இருந்தும் பெட்ரோல் ஊற்றியதால் தன் உடல் எல்லாம் எரிச்சலாக இருப்பதாக ரவி அலறிய தால், போலீசார் தாங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அவரது உடலில் ஊற்றினர். மேலும் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தப் பட்டிருந்த தீயணைப்புத்துறை வாகனத்தை வரவழைத்து ரவியின் உடலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரது அச்சத்தைப் போக்கினர். பிறகு மனுவைபெற்றுக்கொண்டு ரவியை பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
The post பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.