பெங்களூரு: ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என பாஜக தொண்டர்களுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார். வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதேபோல, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என பாஜக தொண்டர்களுக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தியுள்ளார். தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என டி.கே.சிவக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
The post ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் தான் பிரச்னைகள் தீரும்: பாஜக தொண்டர்களுக்கு டி.கே.சிவக்குமார் அட்வைஸ்!! appeared first on Dinakaran.