ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு சேமிப்பு பணம் ரூ.10,000-ஐ முதல்வருக்கு அனுப்பிய எல்கேஜி மாணவி

3 hours ago 1

 

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த திருப்பெயரில், நேற்றுமுன்தினம் நடந்த ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக்கூடிய ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்படும், என கூறுகிறார்கள். ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னாலும், புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம். ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும் திட்டங்கள் தொடரும்’ என கூறியிருந்தார். இந்நிலையில், கடலூரை சேர்ந்த எல்கேஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி, தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூ.10 ஆயிரத்தை தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து சிறுமி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம், எனது பெயர் நன்முகை, நான் எல்கேஜி படிக்கின்றேன். இன்று நீங்கள் கடலூரில் பேசியபோது ஒன்றிய அரசு ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் நமக்கு தரவில்லை என்று கூறினீர்கள். தமிழ்மொழியை காக்க பாடுபடுவேன் என்றும் கூறினீர்கள். எனது பாலு தாத்தா, சாந்தி பாட்டி இருவரும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் ஒன்றிய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கிறேன். தமிழே அறன், கடலூரில் இருந்து நன்முகை. வணக்கம் ஐயா.இவ்வாறு சிறுமி பேசியுள்ளார்.

The post ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு சேமிப்பு பணம் ரூ.10,000-ஐ முதல்வருக்கு அனுப்பிய எல்கேஜி மாணவி appeared first on Dinakaran.

Read Entire Article