இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ‘இர்கான்’ சர்வதேச நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கு அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Technical Assistant: 2 இடங்கள். சம்பளம்: ரூ.36,000. வயது: 30க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Bid Manager ஆக ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. IT Assistant: 2 இடங்கள் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.36,000. தகுதி: ஐடி/சிஎஸ் பிரிவில் பி.இ.,/பி.டெக்., படித்திருக்க வேண்டும். 75% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது எம்சிஏ தேர்ச்சியுடன் எம்எஸ் ஆபீசில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ircon.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.02.2025.
The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் appeared first on Dinakaran.