ஒன்றிய அமைச்சர் மனோகர் லால், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாட்டின் மின்திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து கலந்தாய்வு

3 weeks ago 4

சென்னை: ஒன்றிய அரசின் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாட்டில் எரிசக்தித்துறை சார்பாக நடைபெற்று வரும் மின் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் திட்டங்களான 1X800 மெ. வா., வடசென்னை அனல் மின் திட்டம் (மூன்றாம் நிலை), 2X660 மெ. வா., உடன்குடி அனல் மின் திட்டம் முதல் நிலை, 2X660 மெ. வா. எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டம், 1X600 மெ. வா. எண்ணூர் மிக உய்ய விரிவாக்க மின் திட்டம் ஆகிய அனல் மின் உற்பத்தி திட்டங்களின் கட்டுமானப் பணிகள் குறித்து விரிவாக அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர்.

மேம்படுத்தப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ், மின் இழப்பைக் குறைப்பதற்காக ரூ.8,932 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடிக்க தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய, மாநில அலுவலர்களை அமைச்சர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு எரிசக்தித்துறை செயலாளர் பீலா வெங்கடேசன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அமைச்சர் மனோகர் லால், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாட்டின் மின்திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து கலந்தாய்வு appeared first on Dinakaran.

Read Entire Article