ஒட்டன்சத்திரம், ஜன. 23: ஒட்டன்சத்திரம் அருகே சி.க.வலசு அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வாசுகி தலைமை வகித்தார். விழாவில் கல்லூரியின் 7 துறைகளை சேர்ந்த மாணவிகள் பாரம்பரிய முறைப்படி சேலைகள் அணிந்து வண்ண கோலமிட்டு மண் பானையில் சர்க்கரை பொங்கல், கற்கண்டு பொங்கல், வெண் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.
தொடர்ந்து கும்மியாட்டம், கோலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை ஆடி, பாடி கொண்டாடினர். மேலும் தமிழகத்தில் பெண்களின் உயர்கல்வி கனவை நனவாக்குவதற்காக புதுமை பெண் திட்டம் தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என கோலமிட்டு இருந்தனர். பின்னர் பொங்கல் போட்டிகளில் சிறப்பாக அலங்கரித்த துறைகளுக்கு சுழற்கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது.
The post ஒட்டன்சத்திரம் சி.க.வலசு கல்லூரியில் புதுமை பெண் திட்டம் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.