ஒட்டன்சத்திரத்தில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் ஒரு மாதத்திற்கு பின் கைது

3 months ago 8

 

ஒட்டன்சத்திரம், பிப். 16: ஒட்டன்சத்திரம் அண்ணா நகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் எஸ்ஐ சவடமுத்து தலைமையில் தனிப்படை பிரிவு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திருச்செந்தூர் தளவாய்புரம் வன்னியன் காடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் (42) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஒட்டன்சத்திரம் அண்ணா நகரில் உள்ள வீட்டில் அவர் கொள்ளையடித்தது தெரியவந்தது. ேமலும் அவர் மீது சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபாகரனை கைது செய்து அவரிடமிருந்த நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் ஒரு மாதத்திற்கு பின் கைது appeared first on Dinakaran.

Read Entire Article