காத்மண்ட்: ஒடிசாவின் கேஐஐடியில் படித்து வந்த நேபாளத்தை சேர்ந்த மாணவி பிரிசா கடந்த ஒன்றாம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த பிப்ரவரியில் இதேபோல் நேபாள மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது இரண்டாவது சம்பவமாகும்.
இந்நிலையில் நேபாள நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து பேசிய அவை சபாநாயகர் தேவ்ராஜ் கிம்மைர்,” பிரிசாவின் மரணம் தொடர்பான உண்மைகளை கண்டறிய இந்திய அதிகாரிகளுடன் நேபாள அரசு பேச்சு நடத்த வேண்டும்” என்றார்.
The post ஒடிசாவில் நேபாள மாணவி பலி; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாடாளுமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.