ஐயப்ப சுவாமியை தவறாக சித்தரித்து பாடிய கானா பாடகர் இசைவாணி மீது நடவடிக்கை இந்து முன்னணியினர் புகார்

2 months ago 8

விகேபுரம்,நவ.28:ஐயப்ப சுவாமியை தவறாக சித்தரித்து பாடிய கானா பாடகர் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி விகேபுரம் இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் வனராஜ், விகேபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்திடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில், ‘கானா பாடகர் ஐயப்ப சுவாமியை தவறாக சித்தரித்து பாடல் பாடியது ஐய்யப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. தாங்கள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறோம்’ என்று அதில் கூறியிருந்தார். அப்போது இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், கார்த்திக், வனராஜ், ஐயப்ப சேவா சங்கம் முருகன், தலைவர் குருசாமி மாரியப்பன் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post ஐயப்ப சுவாமியை தவறாக சித்தரித்து பாடிய கானா பாடகர் இசைவாணி மீது நடவடிக்கை இந்து முன்னணியினர் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article