பல்லடம், பிப்.8:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்இ, நர்சரி, பிரைமரி பள்ளி தாளாளர்கள், செயலாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தேவராஜ், மாவட்ட தொடக்க பள்ளி அலுவலர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார், கோவை மண்டல தலைவர் ககிருஷ்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் தினேஷ்ராம், மாவட்ட தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த தாளாளர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெற்றோரைப் போற்றுவோம் நிறைவு விழா ஆண்டு மலர் தயாரித்தல், கற்றல், கற்பித்தல் மாணவர்கள் பாதுகாப்பு சார்ந்தவை, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
The post அருள்புரத்தில் தனியார் பள்ளிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.