திருப்பூர், பிப். 8: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அவினாசி கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து புதிய மக்கள் நல்வாழ்வு மைய கட்டிடம் கட்டி 4 மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னமும் கட்டிடம் திறக்கப்படவில்லை.
இதனை உடனே திறந்து மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வு மையம் முதல் வரிவசூல் செய்யும் இடம் வரை செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை முடித்து சாலை அமைத்து தர வேண்டும். மேட்டுப்பாளையம் குடிநீரை 2 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post மேட்டுப்பாளையம் குடிநீரை 2 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.