ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

4 months ago 21

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறக்கிறார். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் காலையில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும்.

The post ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article