சென்னை: ஐபிஎஸ் அதிகாரி செல்வநாகரத்தினத்துக்கு அனுப்பபட்ட குற்றக் குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐ.பி.எஸ் அதிகாரி செல்வநாகரத்தினம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக 2019-ல் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸ், செல்வநாகரத்தினம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார். இதனை அடுத்து டிஜிபி சார்பில் செல்வநாகரத்தினத்திற்கு மெமோ அனுப்பி, 30 நாட்களில் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. மெமோவை எதிர்த்து நாகசெல்வரத்தினம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மோவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
The post ஐபிஎஸ் அதிகாரி செல்வநாகரத்தினத்துக்கு அனுப்பபட்ட குற்றக் குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.