ஐபிஎல் தொடரில் விராட் கோலி புதிய சாதனை

1 week ago 5

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த போட்டியில் ஒரு பவுண்டரி அடித்ததால் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 1,000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி  படைத்துள்ளார்.

920 பவுண்டரிகளை விளாசிய தவான் 2வது இடத்திலும், 768 பவுண்டரிகளை விளாசிய வார்னர் 3வது இடத்திலும் உள்ளனர் .

Read Entire Article