
ஐதராபாத்,
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில், மற்ற அணிகள் முதல் 4 இடத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.