
பெங்களூரு ,
ஐ.பி.எல். தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 8-வது தோல்வியாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில், சென்னை அணி நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதுகிறது இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளது.பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.