
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரம், 11 கி.வோ. திறன் கொண்ட மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது.
இதனால், அக்கைய்யாநாயுடு சாலை, வாட்டர் டேங்க், முஸ்லிம் தெரு, ம.பொ.சி.சாலை, கடப்பாடிரங்க் ரோடு, ஸ்டிவார்பேட்டை முதல் மற்றும் இரண்டாவது தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, ஆலமரம் தெரு, கே.சி.செட்டி தெரு, கந்தப்பன் நாயக்கர் தெரு, கந்தசாமி தெரு மற்றும் ஆஸ்பிட்டல் தெரு சந்து ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.