ஐ.பி.எல்.: வெற்றியை தொடரப்போவது யார்..? மும்பை - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

2 days ago 2

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி மற்றும் 4 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

மறுபுறம் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி மற்றும் 4 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. வெற்றியோடு தொடங்கிய ஐதராபாத் அணி அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்றது. கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

புள்ளி பட்டியலில் ஏற்றம் காண இரு அணிகளும் வெற்றி பயணத்தை தொடரை முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article