ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு

14 hours ago 2

முல்லாப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

கைவிரல் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடந்த மூன்று ஆட்டங்களில் 'இம்பேக்ட்' வீரராக மட்டும் ஆடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் இருந்து கேப்டன் பொறுப்பை கவனிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Read Entire Article