ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு தலைமை பயிற்சியாளராகும் ஹேமங் பதானி ?

3 months ago 23

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேமங் பதானியிடம் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே போல் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேலை டெல்லி பந்து வீச்சு பயிற்சியாளர் பணிக்கு கொண்டு வரவும் அந்த அணி திட்டமிட்டுள்ளது.

Read Entire Article