
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக அக்சர் படேல் 39 ரன்களும், அசுதோஷ் சர்மா 37 ரன்களும் அடித்தன்ர். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 204 ரன்கள் இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கி உள்ளது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை (20-வது ஓவர்) சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் வீசினார். அதற்கு முன்னர் அவர் இந்த ஆட்டத்தில் பந்துவீசவில்லை.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஆட்டத்தின் (முதல் இன்னிங்சில்) கடைசி ஓவரில் பந்துவீச அறிமுகப்படுத்தப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் சனத் ஜெயசூர்யா, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது வீரராக சாய் கிஷோர் இணைந்துள்ளார்.