
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த போட்டிக்கான சென்னை அணியில் ராகுல் திரிபாதிக்கு பதிலாக 17- வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார்.
இதன் மூலம் ஐ.பி.எல்.வரலாற்றில் சென்னை அணிக்காக குறைந்த வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஆயுஷ் மாத்ரே - 17 வயது 278 நாட்கள்
2. அபினவ் முகுந்த் - 18 வயது 139 நாட்கள்
3. அங்கித் ராஜ்புட் - 19 வயது 123 நாட்கள்
4. மதீஷா பதிரனா - 19 வயது 148 நாட்கள்
5. நூர் அகமது - 20 வயது 79 நாட்கள்
இந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே வெறும் 15 பந்துகளில் 32 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தற்போது வரை சென்னை அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் அடித்துள்ளது.