ஐ.பி.எல். கெரியரின் முதல் ஓவரிலேயே மோசமான சாதனை படைத்த கரீம் ஜனத்

5 hours ago 3

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.

பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் (101 ரன்கள்) விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் விளாசினார். குஜராத் பந்துவீச்சை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விளாசினார்.

இதில் இந்த போட்டியின் மூலம் ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் ஆன ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கரீம் ஜனத் வீசிய 10-வது ஓவரில் மட்டும் சூர்யவன்ஷி தலா 3 பவுண்டரி, சிக்சர் விளாசி 30 ரன்கள் குவித்தார். இது ஐ.பி.எல்.கெரியரில் கரீம் ஜனத்தின் முதல் ஓவராகும்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அறிமுக போட்டியின் முதல் ஓவரிலேயே அதிக ரன்கள் வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை கரீம் ஜனத் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 25 ரன்கள் கொடுத்திருந்ததே மோசமான சாதனையாக இருந்தது. தற்போது இந்த மோசமான சாதனையை கரீம் ஜனத் தன்வசப்படுத்தியுள்ளார்.

Read Entire Article