
கொழும்பு,
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் "கிங்டம்". அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்பட்டாலும், கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
பாக்ய ஸ்ரீயும் தனது சமூக ஊடகங்களில் 'கிங்டம்'பற்றி எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்நிலையில், 'கிங்டம்' படத்தின் முதல் பாடலின் புரோமோ 29-ம் தேதி (நாளை) வெளியாகும் என பாக்ய ஸ்ரீ போர்ஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் இப்படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.