ஐ.பி.எல்.: அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய 2-வது வீரர் - சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்

1 day ago 4

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.

தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்த போட்டியில் ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் 29 பந்தில் 28 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இந்த போட்டியில் ஹெட் 28 ரன் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 1000+ ரன்களை கடந்துள்ளார். இதில் அவர் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்தில் 1000 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் (575 பந்துகள்) படைத்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்தில் 1000 ரன்களை கடந்தவர்கள் பட்டியல்:

ஆண்ட்ரே ரசல் - 545 பந்துகள்

டிராவிஸ் ஹெட் - 575 பந்துகள்

ஹென்ரிச் க்ளாசென் - 594 பந்துகள்

விரேந்திர சேவாக் - 604 பந்துகள்

க்ளென் மேக்ஸ்வெல் - 610 பந்துகள்

கிறிஸ் கெயில் - 615 பந்துகள்

யூசுப் பதான் - 617 பந்துகள்

சுனில் நரைன் - 617 பந்துகள்

Read Entire Article