ஐ.பி.எல்.2025: கோப்பையை வெல்லும் அணி, அதிக ரன், விக்கெட் வீழ்த்த போகும் வீரர்களை கணித்த மைக்கேல் வாகன்

1 day ago 2

லண்டன்,

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். சீசன் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றியை பதிவு செய்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணி, அதிக ரன் மற்றும் விக்கெட் வீழ்த்த போகும் வீரர்கள் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டனர். அந்த வரிசையில் இணைந்துள்ள இங்கிலாந்து முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

அவரது கணிப்பின் படி, மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வருண் சக்ரவர்த்தி அதிக விக்கெட் வீழ்த்துவார் என்றும், சுப்மன் கில் அதிக ரன் அடிப்பார் என்றும் கணித்துள்ளார்.


Read Entire Article