ஐ.பி.எல்.2025: இந்த அணிதான் கோப்பையை வெல்லும்.. ஏனெனில்.. - ஹர்பஜன் சிங்

13 hours ago 2

மும்பை,

10 அணிகளுக்கு இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 51 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டன.

மீதமுள்ள 8 அணிகளுக்கு இடையே பிளே ஆப் சுற்று செல்வதற்கான போட்டி நிலவுகிறது. இவற்றில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் முறையே தலா 14 புள்ளிகள் பெற்று பிளே ஆப் முன்னேறுவதற்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ளன.

இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க கட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தடுமாறியது. பின்னர் எழுச்சி பெற்ற மும்பை தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் அந்த அணி 6-வது கோப்பையை வெல்லும் என்று பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றப்போகும் அணி மும்பை இந்தியன்ஸ்தான் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்த அணியில் உள்ள 11 வீரர்களும் மேட்ச் வின்னர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்றால், மற்ற அணிகளும் கோப்பையை வெல்ல தகுதியற்றவை. குறிப்பாக பும்ரா ஒருவரை பற்றி மட்டும் நான் சொல்லவில்லை அந்த அணியில் பும்ராவை தவிர்த்து டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், வில் ஜாக்ஸ், பாண்ட்யா, கரன் சர்மா, கார்பின் போஷ் என பலரும் பந்துவீசி வருகின்றனர்.

எனவே என்னை பொறுத்தவரை மும்பை அணியில் உள்ள 11 பேரும் மேட்ச் வின்னர்கள்தான். அவர்களிடம் போட்டியை வெல்லக்கூடிய அணி உள்ளது. இது அவர்களின் ஆண்டு. மும்பை 6-வது கோப்பையை வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என கூறினார். 

Read Entire Article