3 பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பு

2 days ago 8

சென்னை,

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததை கண்டித்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள், பதவி கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு, புதிய துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் தேடுதல் குழுவை தமிழக அரசு நியமித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்கள் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் என 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு, தகுதியான 3 பேர்களை தேர்ந்தெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில், ஒருவரை அரசு துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article