
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் அக்ஷர் பட்டேல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடிக்க, சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 184 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஜய் சங்கர் 69 ரன்களுடனும் (54 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 30 ரன்களுடனும் (26 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் சென்னை வீரர் விஜய் சங்கர் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் நடப்பு சீசனில் மெதுவாக அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. விஜய் சங்கர் - 43 பந்துகள்
2. ரச்சின் ரவீந்திரா - 42 பந்துகள்
3. லிவிங்ஸ்டன் - 39 பந்துகள்
4. கெய்க்வாட் - 37 பந்துகள்