ஐ.சி.சி-யின் நவம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர்

5 months ago 12

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

இதில் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் மற்றும் தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல், நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடின் டி கிளர்க், இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட்-ஹாட்ஜ் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஷர்மின் அக்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வென்றவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. அதன்படி ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் ஹரிஸ் ரவூப் வென்றுள்ளார். மேலும், நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் டேனி வியாட்-ஹாட்ஜ் கைப்பற்றி உள்ளார்.


Blistering pace, stellar performances – Pakistan's fiery pacer takes home the ICC Men's Player of the Month Award ️

— ICC (@ICC) December 11, 2024


A sensational run against South Africa in November lands England's star batter the ICC Women's Player of the Month award

— ICC (@ICC) December 11, 2024

Read Entire Article