ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய மர்ம கும்பல்

2 months ago 10

சென்னை,

ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராதாகிருஷ்ணன் பெயரில் மர்ம கும்பல் ஒன்று போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அவரின் நண்பரிடமே கைவரிசை காட்ட முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன், தன்னுடைய அதிகாரப்பூர்வ 'பேஸ்புக்' பக்கத்தில், "ராதாகிருஷ்ணன் ஜெகநாதன் எனும் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலி பேஸ்புக் கணக்கில் என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி, சி.ஆர்.பி.எப் நண்பர் ஒருவருக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக தெரிவித்து, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, போலீசிலும் புகார் தெரிவிக்க உள்ளேன். என்னிடம், ஒரே ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் இன்ஸ்டாகிராம் சமூகவலைதள கணக்கு மட்டுமே உள்ளது. மோசடி செய்பவர்களிடம் இருந்து வரும் எந்த ஒரு அழைப்புகளையும் யாரும் ஏற்க வேண்டாம்" என்று அதில் பதிவிட்டிருந்தார். 

Read Entire Article