ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி. வெற்றி

2 months ago 14

புதுடெல்லி,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி சார்பில் வில்மர் ஜோர்டான் 30 மற்றும் 90+9வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். பஞ்சாப் எப்.சி அணி சார்பில் லூகா 40 மற்றும் 48வது நிமிடங்களிலும், அஸ்மிர் 70-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Read Entire Article