'ஏழுமலை' படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட சிவராஜ்குமார்

4 hours ago 3

சென்னை,

புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஏழுமலை. இப்படத்தில் ராண்ணா, பிரியங்கா ஆச்சார், ஜகபதிபாபு, நாகபரனா, கிஷோர் குமார், சர்தார் சத்யா, ஜகப்பா உள்பட பலர் நடித்து உள்ளனர். டி.இமான் படத்துக்கு இசை அமைத்து உள்ளார்.

கேரளா, தமிழ்நாடு எல்லைப் பகுதிகள் மற்றும் சேலம், ஈரோடு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது. விரைவில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் படம் ஒரே நேரத்தில் திரைக்கு வருகிறது.

இதையொட்டி படத்தின் டீசர் வெளியீட்டு விழா பெங்களூரில் நடந்தது. விழாவில் நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'இந்த டீசர் அருமையாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் நல்லவர்களுக்கே நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி. ராண்ணா மிகவும் ஹேண்ட்சமாக இருக்கிறார். பிரியங்காவைப் பார்க்க ஒரு புதியவரைப் போலத் தெரியவில்லை. புதியவர்கள் வந்து சினிமாவை மாற்ற வேண்டும். மக்கள் பாராட்டினால் லாபம் தானாக வரும். அதுதான் எப்போதும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article