ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

6 months ago 19

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லாக் கலைஞன், இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த புயல், அன்பு இளவல் ஏ.ஆர்.ரகுமானுக்குஎன் உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!.. இசைபட வாழ்க! " என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article