
சென்னை,
சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் பிரிவுக்கு இடையிலான நான்காவது வழித்தட இணைப்பு பணிகள் காரணமாக, எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் எழும்பூருக்கு வருகை தரும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில், எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் எழும்பூருக்கு வருகை தரும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக தெற்குரெயில்வே தனது எக்ஸ் வலைதளத்தில், "சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் பிரிவுக்கு இடையிலான 4வது வழித்தட திட்டத்திற்கான இடைப்பூட்டு இல்லாத பணிகளை எளிதாக்கும் வகையில் ரெயில் சேவை முறையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பயணிகள் தயவுசெய்து இதைக் கவனத்தில் கொண்டு உங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட உள்ள ரெயில் சேவைகள் குறித்த முழு விவரம்:-


