எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

6 months ago 18

சென்னை,

பிரபல புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன்(65 வயது) இன்று காலமானார். மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இந்த நிலையில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சவுந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர்.

வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சவுந்தர்ராஜன் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article