ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்பு பணியக இயக்குநர் தபன் தேகா, பிஎஸ்எப், சிஐஎஸ்எப் மற்றும் சிவில் விமான பாதுகாப்பு பணியக இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் தற்போதுள்ள நிலைமை மற்றும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமித் ஷா கேட்டறிந்தார்.
* பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று விமானப்படை நிலையத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சண்டிகரில் சைரன்கள் ஒலிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கவும், பால்கனிகளில் யாரும் நிற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பஞ்ச்குலாவிலும் இதேபோன்று சைரன் ஒலிக்கவிடப்பட்டது. பஞ்சாபின் மொகாலியில் சண்டிகரையொட்டி இருக்கும் பகுதியில் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
The post எல்லை நிலவரம், விமான நிலைய பாதுகாப்பு குறித்து அமைச்சர் அமித் ஷா ஆலோசனை appeared first on Dinakaran.