எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம்

4 hours ago 3

புதுடெல்லி: எல்ஐசி புதிய எம்டி மற்றும் சிஇஓவாக தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த ஆர். துரைசாமியை ஒன்றிய அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, நிதிச் சேவைகள் துறையால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக துரைசாமியை மூன்று ஆண்டு காலத்திற்கு ஒன்றிய அரசு நியமித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மூன்று ஆண்டு ஆகும். 2028 ஆகஸ்ட் 28 வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மதுரை காமராஜர் பல்கலையில் பட்டம் படித்தவர் ஆவார்.

 

The post எல்ஐசிக்கு புதிய எம்டியாக தமிழ்நாட்டை சேர்ந்தவர் நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article