மயிலாடுதுறை, ஜூலை 15: தமிழ்நாடு முதலமைச்சரும், திமுகழக தலைவருமான மு.க ஸ்டாலின், இன்று,நாளை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின், சுமார் 9 அடி உயரம் உள்ள வெண்கல திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து 68 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.
அதன்பின்னர் பூம்புகார் சாலையில் இருந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அண்ணா அறிவாலயம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற உள்ள ரோட் ஷோவில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திக்கிறார். அதன் பின்னர் சீர்காழி பகுதியில் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் நாளை 16ம் தேதி மயிலாடுதுā©றை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்க உள்ளார். இதனை முன்னிட்டு மயிலாடுதுறை நகர் பகுதியில் கழகக் கொடியின் தோரணங்கள், சாலை நெடுகிலும் வாழை மரங்கள் மற்றும் பெரியார், அண்ணா, கலைஞர், முக.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்களுடன் பிரம்மாண்ட தோரணங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 15ம் தேதி மாலை மயிலாடுதுறைக்கு வருகை தந்து விழாவை சிறப்பிக்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர்கள் கே.என். நேரு, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமானோர் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
The post மயிலாடுதுறைக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு; திமுகவினருக்கு நகர் மன்ற தலைவர் செல்வராஜ் அழைப்பு appeared first on Dinakaran.