மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.31 லட்சம் நலத்திட்ட உதவி மாவட்ட கலெக்டர் வழங்கினார்

4 hours ago 4

நாகப்பட்டினம், ஜூலை15: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம்- மதிப்பில் செயற்கை கால் அவயங்கள், 2 செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500 மதிப்பில் காதொலிக்கருவி ஆகியவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். டிஆர்ஓ பவணந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.31 லட்சம் நலத்திட்ட உதவி மாவட்ட கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article