நாகப்பட்டினம், ஜூலை 15: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக 8 கோட்டங்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்த 1995 பொது நிலையானை காமன் ஸ்டாண்டிங் ஆர்டர் (Common Standing Order)- ல், ஒழுங்கு நடவடிக்கைக்கான தண்டனை குறிப்பிடப்படாத சட்ட விரோதமான 1995 பொது நிலை ஆணை பயன்படுத்தி அனைத்து மண்டலங்களில் உள்ள 26 பொது மேலாளர்கள் தன் விருப்பத்திற்கேற்ப மற்றும் லஞ்ச ஊழல் அரசியல் ஆகியவைகளுக்கு தகுந்தாற்போல் தண்டனையை தீர்மானித்து வழங்குவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.
இந்த சட்டவிரோத நடைமுறையை எதிர்த்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவையின் பொது செயலாளர் காமராஜ் ரிட் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவில், ஒவ்வொரு குற்றச்செயல்களுக்கு என்ன தண்டனை என்பதை குறிப்பிட்டு பொது நிலையாணையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு கடந்த 10ம் தேதி நீதிபதி பி.டி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவையின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பாலமுகி வழக்கில் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கில் பதிலுரை தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
The post போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான சட்டவிரோத நடைமுறையை எதிர்த்த வழக்கு விசாரணை ஆக.22க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.