பந்தலூர், ஜன.25: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட எருமாடு ஓனிமூலா பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் கிணறு அமைக்கப்பட்டு, பம்பிங் அறை மற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டு மின்னிணைப்பு பெற்று குடிநீர் விநியோகம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் எருமாடு வெட்டுவாடி பகுதியிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யாமல் உள்ளது. எனவே கிடப்பில் உள்ள பணிகளை முழுமையாக மேற்கொண்டு சீரான குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post எருமாடு ஓனிமூலா பகுதியில் குடிநீர் பிரச்னை: மக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.