கலசப்பாக்கம், ஜன.17: கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. காணும் பொங்கல் திருநாளையொட்டி கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஆதமங்கலம், புதூர் கடலாடி, கீழ்பாலூர், கேட்ட வரம் பாளையம், மேல்சோழங்குப்பம் வீரலூர் உள்ளிட்ட கிராமங்களில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். காளைகள் அலங்கரிக்கப்பட்டு விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், ஆபரண பொருட்கள் காளைகளின் கொம்புகளில் வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுக்க இளைஞர்கள் போட்டி போட்டு களத்தில் இறங்கினர். ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து இலக்கை எட்டியது. இதனை பொதுமக்கள் வீடுகள் மீது அமர்ந்து மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். அதன்படி, ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், போளூர் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கண்டு ரசித்தனர் கடலாடி கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவை எம்எல்ஏ பெ சு தி சரவணன் தொடங்கி வைத்தார் நேற்று காளை விடும் விழா நடைபெற்ற கிராமங்களில் திரும்பும் திசையெல்லாம் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
The post எருது விடும் திருவிழா கலசப்பாக்கம் ஒன்றியத்தில் appeared first on Dinakaran.