
சர்வதேச தாய் மொழி நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச தாய் மொழி நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!
#தமிழ்_வாழ்க!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.