அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி

11 hours ago 1

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுனர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடம் அருகே நேற்று மாலை சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article