
அல் அமேரத்,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ.) அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 10.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் யு.ஏ.இ. அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.