
சென்னை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மறுபுறம் அமீர்கான் 'லாகூர் 1947' என்ற படத்தை தயாரித்தும் வருகிறார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் இப்படத்தில் சன்னி திவோல் கதாநாயகனாக நடிக்க பிரீத்தி ஜிந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அமீர்கான், படம் வெற்றி பெற்றால் மட்டுமே சம்பளம் வாங்குவதாக கூறினார். அவர் கூறுகையில்,
'20 வருடங்களாக நான் நடித்த எந்த படத்திற்கும் சம்பளம் வாங்குவதில்லை. அனால், அந்த படம் திரைக்கு வந்து லாபம் ஈட்டிய பிறகு அந்த லாபத்தில் பங்கு பெற்றுக்கொள்வேன். அதற்கு முன் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்குவது இல்லை. சம்பள முன்பணமும் பெறுவது இல்லை. இதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகிறேன்' என்றார்.
தொடர்ந்து 'தாரே ஜமீன் பர்' படம் பற்றி பேசுகையில், "அந்த படத்தோட கதை கேட்டதும் கண்டிப்பா மக்கள் பாக்க வேண்டிய படம் என்று தோணுச்சு. நான் அந்த கதையை கேட்டு நிறைய அழுதேன்'என்றார்.