
சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்.கே.செல்வமணி. விஜயகாந்தை வைத்து இவர் இயக்கிய "கேப்டன் பிரபாகரன்", "புலன் விசாரணை" இவ்விரண்டும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில், கதை சொல்பவர் எல்லாம் இயக்குனராகி இருப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
"கதை சொல்வதும், படத்தை இயக்குவதும் வித்தியாசமானது. ஆனால், இப்போது கதை சொல்பவர் எல்லாம் இயக்குனர் ஆகி இருப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு' என்றார்.