![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35684726-state-03.webp)
சென்னை,
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கம் இணைந்து நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பெரியாரை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். அரசியலில் என்னை சிலர் பகடை காயாக பயன்படுத்த முயற்சித்தார்கள்.
என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை. தமிழக அரசை கவிழ்ப்பதற்கு தொடர்ச்சியாக சதி செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் கோரிக்கை வைக்கக் கூடியவர்களாக மட்டும் இருக்க கூடாது, கோட்பாடுகளை பாதுகாக்க கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.