என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்

2 hours ago 1

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பி.பிளான் ஆகிய படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்துக்கு அதிகமான என்ஜினீயரிங் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்காக 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்க வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நடப்பு கல்வி ஆண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி, தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வருகிற 9-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மாணவர்களின் வசதிக்காக முன்கூட்டிய மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article